லாஸ்லியாவுக்காக சாண்டியுடன் மோதும் கவின்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் கடந்த சில வாரங்களாக காதலர்களாக வலம் வருவதும் லாஸ்லியாவின் பெற்றோரின் வருகைக்குப் பின்னர் இருவரும் தங்கள் காதலை தற்காலிகமாக ஒத்தி வைத்துவிட்டு போட்டியில் தீவிர கவனம் செலுத்தி வருவதும் தெரிந்ததே. இருப்பினும் இருவர் மனதில் உள்ளுக்குள் காதல் பூத்து கொண்டுதான் இருக்கின்றது என்பது அவ்வப்போது தெரிய வருகிறது.
இந்த நிலையில் இன்றைய டாஸ்க் ஒன்றில் லாஸ்லியாவை சாண்டி கீழே தள்ளி விடுகிறார். கீழே விழுந்து லாஸ்லியா, ’பரவாயில்லை இது ஒரு கேம் தான் என சமாதானம் செய்து கொள்கிறார். தெரியாமல் நடந்து விட்டதாக வருத்தம் தெரிவிக்கிறார் சாண்டி. ஆனால் லாஸ்லியாவின் கீழே தள்ளிவிட்ட சாண்டி மீது எகிறுகிறார் கவின். வேண்டும் என்றே சாண்டி தள்ளி விட்டதாகவும் குற்றம்ஞ்சாட்டுகிறார். நீ ரொம்ப ஓவரா பண்ணாதே, தெரியாமல் நடந்துவிட்டது என்று சாண்டி கூறியதும், யார் ஓவரா பண்றா, நீதான் தள்ளிகிட்டே போற, நான் பார்த்துகிட்டு தானே இருக்கேன்’ என்று கூறுகிறார்.
கேமில் இதெல்லாம் சகஜம், இதனை பெரிதாக்க வேண்டாம் என்று தர்ஷன் சமாதானம் செய்ததையும் கேட்காமல் லாஸ்லியாவுக்காக கவின் வரிந்து கட்டிக்கொண்டு சாண்டியிடம் சண்டைக்கு செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிபட்ட லாஸ்லியாவே இந்த விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதேபோல் லாஸ்லியா கீழே விழுந்ததும் சாண்டி தான் உடனே அவரை தூக்கி அடிபட்டதா? என்று அக்கறையுடன் கேட்கிறார். அவர் மீது கவின் எகிறுவதுதான் கொஞ்சம் ஓவராக இருப்பது போல் தெரிகிறது.
#Day88 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/ZyYBE7cMiV
— Vijay Television (@vijaytelevision) September 19, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout