டாடான்னா வேற யாரும் இல்லை, உன்னை பெத்த அப்பன் தான்..  கவின் நடித்த 'டாடா' டீசர்

  • IndiaGlitz, [Saturday,January 07 2023]

தமிழ் திரைப்பட நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான கவின் நடித்த ‘டாடா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு இந்த படம் தயாராக உள்ளது.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கவின், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்த காமெடி காட்சிகள் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளன. இந்த படம் காமெடி மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட படம் என்பதும், முழுக்க முழுக்க இளைஞர்களுக்கு ஆனது என்பது இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ள இந்த டீசரில் உள்ள காட்சிகள் அனைவரையும் கவர்ந்துள்ளதை அடுத்து இந்த படம் வெற்றிப்படமாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

கவின், அபர்ணாதாஸ், கே பாக்யராஜ், விடிவி கணேஷ், ப்ரதீப் அந்தோணி, ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கணேஷ் பாபு இயக்கியுள்ளார். ஜென் மார்ட்டின் இசையில், எழிலரசு ஒளிப்பதிவில் கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் விரைவில் ஜனவரியில் ரிலீசாக உள்ளதாக இந்த டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.