எதுல முடியுமோ அதுல குறிச்சு வச்சுக்கோங்க: 'ஸ்டார்' ரிலீஸ் தேதியை அறிவித்த கவின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகளும் முடிவடைந்து விட்டது என்றும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் கவின் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் செய்தியை அறிவித்துள்ளார். அதன்படி இந்த படம் வரும் மே 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலண்டர், டைரி, போன் இல்ல மனசுல, எதுல முடியுமோ, அதுல குறிச்சு வச்சுக்கோங்க, மே 10 முதல் ‘ஸ்டார்’ ரிலீஸ் என்று கவின் பதிவு செய்து அட்டகாசமான ஸ்டில்லையும் வெளியிட்டுள்ள நிலையில் இந்த ஸ்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சரியான தேதியை ‘ஸ்டார்’ படக்குழு தேர்வு செய்துள்ளனர் என்பதால் இந்த படம் நிச்சயம் வசூலில் சக்கை போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவின் ஜோடியாக அதிதி பொலங்கர், லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் எழிலரசு ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
Calendar, diary, phone.. illa manasula... :)
— Kavin (@Kavin_m_0431) April 18, 2024
Edhula mudiyumo kurichu vechukonga!
மே 10 முதல், ஸ்டார் :)#StarFromMay10 ⭐️@elann_t @thisisysr sir @aaditiofficial @PreityMukundan @LalDirector sir @riseeastcre @Ezhil_DOP @PradeepERagav @Meevinn @sujith_karan @muthukumaranvfx… pic.twitter.com/aQmL8LMBQX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments