நெல்சனுடன் நேருக்கு நேர் மோதிய கவின்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நெல்சன் மற்றும் கவின் ஆகிய இருவரும் நேருக்கு நேராக மோதும் இண்டோர் கேம் விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் நெல்சன் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கவினுடன் நல்ல பழக்கம் என்பதும், இருவரும் கடந்த பல ஆண்டுகளாக நட்புடன் உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே. மேலும் நெல்சன் இயக்கிய ’டாக்டர்’ மற்றும் ’பீஸ்ட்’ படங்களில் உதவி இயக்குனராக கவின் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நெல்சன் மற்றும் கவின் ஆகிய இருவரும் சமீபத்தில் கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இருவரும் இன்டோர் விளையாட்டான டேபிள் சாக்கர் என்ற விளையாட்டை விளையாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருவரை ஒருவர் வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்துடன் விளையாடிய இந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’ என்ற படத்தை இயக்க உள்ளார் என்பதும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் கவின் தற்போது ‘ஊர்க்குருவி’ மற்றும் ’டாடா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
. @Kavin_m_0431 na @Nelsondilpkumar na Chilling ????#Kavin #OorKuruvi #DaDa pic.twitter.com/e4RTmZn6a8
— Telugu Kavin Fans Club (@Telugu_KFC) May 3, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments