close
Choose your channels

ஒரே படத்தில் கவின் - நயன்தாரா? இயக்குனர், தயாரிப்பாளர் இந்த பிரபலங்களா?

Wednesday, May 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரே படத்தில் கவின் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

நடிகர் கவின் தமிழ் திரை உலகில் படிப்படியாக உயர்ந்து வருகிறார் என்பதும் ’லிப்ட்’ ’டாடா’ மற்றும் ’ஸ்டார்’ ஆகிய ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த அவர் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மாஸ்க்’ நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ’பிளடி பெக்கர்’ மற்றும் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கிஸ்’ ஆகிய படங்களில் கவின் நடித்து வருகிறார் என்பதும் இதில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் மூலம் விஷ்ணு எடாவன் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ’லியோ’ ’டாடா’ உள்பட சில படங்களில் பாடல்கள் எழுதியவர் விஷ்ணு எடாவன் என்பதும் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனராக பல படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவின், நயன்தாரா மற்றும் விஷ்ணு எடாவன் ஆகிய மூவரும் இணையும் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கவின் ஜோடியாக நயன்தாரா நடிக்க போகிறாரா? அல்லது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment