ஒரே படத்தில் கவின் - நயன்தாரா? இயக்குனர், தயாரிப்பாளர் இந்த பிரபலங்களா?

  • IndiaGlitz, [Wednesday,May 22 2024]

ஒரே படத்தில் கவின் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் கசிந்துள்ளது.

நடிகர் கவின் தமிழ் திரை உலகில் படிப்படியாக உயர்ந்து வருகிறார் என்பதும் ’லிப்ட்’ ’டாடா’ மற்றும் ’ஸ்டார்’ ஆகிய ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்த அவர் தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மாஸ்க்’ நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ’பிளடி பெக்கர்’ மற்றும் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கிஸ்’ ஆகிய படங்களில் கவின் நடித்து வருகிறார் என்பதும் இதில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் மூலம் விஷ்ணு எடாவன் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ’லியோ’ ’டாடா’ உள்பட சில படங்களில் பாடல்கள் எழுதியவர் விஷ்ணு எடாவன் என்பதும் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனராக பல படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவின், நயன்தாரா மற்றும் விஷ்ணு எடாவன் ஆகிய மூவரும் இணையும் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கவின் ஜோடியாக நயன்தாரா நடிக்க போகிறாரா? அல்லது இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

தளபதி விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஜெயம் ரவி மனைவி.. இவ்வளவு அழகா போட்டோ எடுப்பாரா?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தளபதி விஜய் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில்

விஜய் டிவியின் 'பாக்கியலட்சுமி' தொடரில் இருந்து விலகிய நடிகர்.. 'இவருக்கு பதில் இவர்' யார்?

தொலைக்காட்சி சீரியல்களை பொறுத்தவரை திடீரென நடிகர் நடிகைகள் விலகுவதும் 'இவருக்கு பதில் இவர்' என்ற ஒரு டைட்டில் கார்டை மட்டும் போட்டு வேறு நடிகர் நடிகையை ஒப்பந்தம்

சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார் மனைவி அம்ருதா ஸ்ரீனிவாசன்.

சமீபத்தில் கூட கார்த்திக் குமார் குறித்து சுஜி முன் வைத்த குற்றச்சாட்டுகள் பலரை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது...

நடிகர் கிச்சா சுதீப்புக்கு இவ்வளவு பெரிய மகளா? இன்னொரு ஹீரோயின் தயார்..!

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் மகள் தனது 20 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கும் நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும் வருகிறது.

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பிரபல இயக்குனரா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

அஜித் தற்போது 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் அவர் நடிக்கும் அடுத்த படத்தை