கவின் நடித்த 'ஸ்டார்' படத்தின் சிங்கிள் பாடல்.. யுவன் குரலில் ஒரு மாயாஜாலம்..!

  • IndiaGlitz, [Friday,February 16 2024]

கவின் நடித்து வரும் ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவு பெறவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்து பாடிய மெலோடி பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. யுவன் சங்கர் ராஜாவின் மேஜிக் குரலில் இயக்குனர் இளன் எழுதியுள்ள இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்’ என்ற பாடல் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்த நாளில் வெளியாகி அந்த பாடல் சூப்பர் ஹிட்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது

கவின் ஜோடியாக அதிதி பொலங்கர், லால், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் எழிலரசு ஒளிப்பதிவில் பிரதீப் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.