தர்ஷனுடன் சபரிமலை யாத்திரை: கவின் வெளியிட்ட புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Wednesday,December 08 2021]

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகருமான கவின் தற்போது சபரிமலை யாத்திரை சென்று உள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

’நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கவின். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலம் ஆனார் என்பதும் சமீபத்தில் அவர் நடித்த ’லிப்ட்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கவின் மற்றும் ‘கனா’ நடிகர் தர்ஷன் ஆகியோர் சபரிமலை யாத்திரை சென்று உள்ளனர். இது குறித்த புகைப்படங்களை கவின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஏவிஎம் ஸ்டுடியோ அருகே அனாதையாக இறந்து கிடந்த விஜயகாந்த் பட இயக்குனர்!

விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டூடியோ அருகே அனாதையாக இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஓய்வெல்லாம் கிடையாது… கிரிக்கெட் வீரர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த பிசிசிஐ!

நியூசிலாந்துக்கு எதிரான 3டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடர் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுடன்

யுவன் ஸ்டுடியோவில் விஜய் டிவி புகழ்: என்னவாக இருக்கும்?

குக் வித் கோமாளி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் பிரபலமடைந்த புகழ், யுவன் சங்கர் ராஜாவின் ஸ்டுடியோவில் இருக்கும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ

பிக்பாஸ்: இவ்வளவு கேவலமாவாட விளையாடுவீங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான தாமரை கடந்த 65 நாட்களில் பல போட்டியாளர்களுடன் சண்டை போட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டியாளர் உடன் சண்டை போட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

'Squid Game' வெப்தொடருக்கு டப்பிங் கொடுத்தவர் இந்த பிரபல தமிழ் நடிகரா? ஆச்சரிய தகவல்!

கடந்த செப்டம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான 'Squid Game'என்ற வெப்தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த தொடர் 94 நாடுகளில் 111 மில்லியன் பார்வையாளர்கள்