ஓடிடியில் கவின் நடித்த 'லிப்ட்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள ‘லிப்ட்’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கவின் மற்றும் அம்ரிதா ஐயர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘லிப்ட்’. ஐடி அலுவலகம் ஒன்றில் நடக்கும் திரில் சம்பவத்தின் கதையம்சம் கொண்ட இந்த படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில மாதங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் திரையரங்குகள் திறப்பதற்காக இந்த படம் காத்திருந்தது என்று கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ‘லிப்ட்’ திரைப்படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை வினித் வரப்பிரசாத என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் கவினுக்கு திரையுலகில் திருப்புமுனையை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Up and down, up and down, up and down, that's how our heartbeat sounds. #Lift Trailer out tomorrow! #DisneyPlusHotstarMultiplex @Kavin_m_0431@Actor_Amritha @EkaaEntertainm1 @VineethVarapra1 @Hepzi90753725 @willbrits @ganesh_madan @nyshanth_r @dancersatz pic.twitter.com/1cKvl0cBZs
— Disney+ Hotstar (@DisneyPlusHS) September 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments