close
Choose your channels

சூர்யா-ஜோதிகாவின் வெற்றிப்படம்.. 18 வருடங்கள் கழித்து 2ஆம் பாகத்தில் கவின்?

Saturday, June 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா , ஜோதிகா நடித்த வெற்றி படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் சூர்யாவுக்கு பதிலாக கவின் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா, பூமிகா, வடிவேலு உள்பட பலர் நடித்த ’சில்லுன்னு ஒரு காதல்’ என்ற திரைப்படம் இயக்குனர் கிருஷ்ணா என்பவரால் இயக்கப்பட்டது. இந்த படம் சூப்பர் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் சூர்யா-ஜோதிகாவின் கெமிஸ்ட்ரி, பூமிகாவின் நடிப்பு, ஏஆர் ரஹ்மானின் சூப்பர்ஹிட் பாடல்கள் மற்றும் வடிவேலு காமெடி அனைவராலும் ரசிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 18 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இயக்குநர் கிருஷ்ணா முடிவு செய்திருப்பதாகவும் சூர்யாவுக்கு பதிலாக இந்த படத்தில் கவினை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அந்த படம் தான் ‘ சில்லுன்னு ஒரு காதல் 2’ என்றும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த மற்ற தகவல்கள், இந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.