கவின் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த பிரபல இயக்குனரா? வேற லெவல் தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,September 27 2023]

’டாடா’ என்ற ஒரே ஒரு படம் பெற்ற வெற்றி காரணமாக நடிகர் கவினுக்கு தற்போது திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தற்போது அவர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்திலும் கவின் தான் நாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது



மேலும் நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் படத்திலும் கவின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்படி மாரி செல்வராஜ் இயக்கத்தில் கவின் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கி முடித்து விட்டு அவர் கவின் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.

எனவே கவினுக்கு திரையுலகில் பெரிய இயக்குனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை அடுத்து அவர் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் போல் வளர்ந்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.