அடுத்தடுத்து 3 படங்களை முடித்துவிட்ட கவின்.. 46 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,March 14 2024]

கவின் நடித்து வந்த ’ஸ்டார்’ மற்றும் ’கிஸ்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இன்னொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ’ஸ்டார்’ என்ற படத்தில் நடித்து வந்தார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து அவர் ‘கிஸ்’ என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் நெல்சனின் உதவியாளர் சிவபாலன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வந்தார் என்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 46 நாட்களில் முடிவுக்கு வந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை குரூப் புகைப்படத்தின் மூலம் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்திருக்கும் இந்த படத்தை நெல்சன் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த படத்தில் கவின் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள நிலையில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்த தன்ராஜ் ,பிளாக் ஷீப் புகழ் அக்ஷயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ’ஸ்டார்’ ’கிஸ்’ மற்றும் 'சிவபாலன்' படம் என மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்ட கவின், அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

14 வருடங்களுக்கு பின் கேரளா செல்லும் விஜய்.. அங்கேயும் வேன் மேல் ஏறி செல்பி உண்டா?

தளபதி விஜய் 14 ஆண்டுகளுக்கு பின்னர் கேரளாவுக்கு படப்பிடிப்புக்காக செல்ல இருப்பதை அடுத்து அங்கும் ரசிகர்கள் முன்னிலையில் வேன் மேல் ஏறி செல்பி புகைப்படம் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 ஓடிடி தளங்கள் முடக்கம்.. தமிழ் ஓடிடி தளம் உண்டா? முழு பட்டியல்..!

ஆபாச காட்சிகள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக இந்தியாவில் 18 ஓடிடி தளங்கள் தடை செய்யப்படுவதாக மத்திய தகவல்

லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு எண்ட்-கார்டு? திருமண தேதியை அறிவித்த அமீர்-பாவனி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி கடந்த சில மாதங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரும் அளித்த பேட்டியில் தங்களது திருமண தேதியை

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சூப்பர் ஹிட் 'லவ்வர்' திரைப்படம்.. ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான 'லவ்வர்' படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது

அஜித்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவரா? செம்ம ஹிட்டாக வாய்ப்பு..!

அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது.