கருணாநிதி எழுதி வைத்த உயில் இதுதான்: வைரமுத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி நேற்று சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு விடிய விடிய மட்டுமின்றி இன்று அதிகாலை முதல் திமுக தொண்டர்கள் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவிஞர் வைரமுத்து கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கலைஞர் இல்லாத தமிழ்நாடு என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. கலைஞர் இல்லாமல் ஒரு விடியல் தமிழ்நாட்டிற்கு எப்படி வரும்? என்று எனக்கு தோன்றவில்லை. சூரியன் இல்லாமல் ஒரு விடியல் வானத்தில் வருமா?
கலைஞருக்கு என் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக்கடனை செலுத்துவதற்காக இங்கு வந்துள்ளேன். தமிழக மக்கள் நன்றி மிக்கவர்கள் என்று நான் நம்புகிறேன். கலைஞருடைய புகழை பாடுவதும், அவர் லட்சியங்களை முன்னெடுத்து செல்வதும், அவர் வாழ்ந்த வாழ்வில் இருந்து புதிய தலைமுறை நற்பாடங்களை பெற்று கொள்வதும் கடமை என்று நான் கருதுகிறேன். இலக்கியங்களில் அவர் வாழ்வார், சொற்பொழிவில் அவர் வாழ்வார், செயல்களால் அவர் வாழ்வார்.
அவருடைய போர்க்குணம் இன்றைய இளைய சமுதாயத்திற்கு வரவேண்டும். அவருடன் கருத்துவேறுபாடு கொண்டவர்கள் கூட அவருடைய போர்க்குணம், தீராத உழைப்பு, போராளித்தன்மை, வளையாத கொள்கை, எந்தவித கருத்துவேறுபாடு கொள்ள மாட்டார்கள். அவருடைய திடம், மன உறுதி தமிழ் சமுதாயத்திற்கு தொடர்ந்து வரவேண்டும். தமிழ் சமுதாயத்திற்கு அவர் எழுதி வைத்துள்ள மிகப்பெரிய உயிர் சுயமரியாதையும் இன அடையாளமும்தான். அவர் எழுதி வைத்த சொத்தை பாதுகாப்பது தமிழர்களின் பெருங்கடமை. வாழ்க கலைஞர் புகழ், வெல்க அவரது புகழ்'
இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments