எங்களுக்கு சுடுகாடு! உங்களுக்கு சட்டமன்றமா? நடிகர்களுக்கு கவிஞர் அறிவுமதி கேள்வி

  • IndiaGlitz, [Wednesday,May 23 2018]

தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து கோலிவுட் திரையுலகின் கிட்டத்தட்ட முக்கிய நடிகர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்துவிட்ட நிலையில் நடிகர்களுக்கு கவிஞர் அறிவுமதி கவிதை வடிவில் கேள்விக்கணைகளை அடுக்கியுள்ளார். அவர் எழுதிய கவிதை இதோ:

நடிகர்களே!இப்போது
புறப்பட்டுவிடாதீர்கள்
உங்களுக்கு
மூச்சத் திணறல் ஆகிவிடும்
எல்லாம் அடங்கட்டும்
இன்னும்தான்
தேர்தலுக்கு
நாளிருக்கிறதே!
நடிகர்களே!உங்கள்
அண்ணன்கள்
நன்றாக பேட்டி
கொடுத்துக் கொண்டு
பாதுகாப்பாக
இருக்கிறார்களா?
இருக்கட்டும்
எங்கள் அண்ணன்கள்தான்
செத்துக் கிடக்கிறார்கள்!
நடிகர்களே!உங்கள் மகள்கள்
பாதுகாப்பாக
படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்களா?
பாதுகாப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்களா?
இருக்கட்டும்
எங்கள் மகள்கள்தான்
செத்துக் கிடக்கிறார்கள்!
நடிகர்களே!
இவர்கள் அரசியல் வேறு
உங்கள் அரசியல் வேறா?
இவர்களுக்கு சுடுகாடு!
உங்களுக்கு சட்டமன்றமா?
ஓ.. நாடாளுமன்றமுமா?
நல்லது நடிகர்களே!
கிளிசரினோடு
தேர்தல்
பிரச்சாரத்திற்குப்
புறப்படுமுன்
உங்கள் எசமானர்களிடம்
கேட்டுச் சொல்லுங்கள்..
எங்கள் உறவுகளின் சாவுக்காக
நாங்கள்
கொஞ்சம்
அழுது கொள்ள
அனுமதி கிடைக்குமா!!!

இந்த கவிதை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

More News

ஒரு அரசு மக்களின் பக்கம் நிற்பதுதானே அறம்? நடிகர் சூர்யா

தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் 11 பேர் பலியாகினர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: கண்டனம் தெரிவித்த கோலிவுட் ஸ்டார்கள்

தமிழகத்திற்கு குறிப்பாக தூத்துகுடி மக்களுக்கு நேற்று ஒரு கருப்பு தினம் என்றே கூறலாம்.

சென்னையில் கத்திமுனையில் பாலியல் பலாத்காரம்: 2 பெண்கள் புகார்

சென்னையில் நேற்று ஒரே நாளில் இரண்டு பெண்கள் கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தினோம்: டிஜிபி விளக்கம்

தூத்துகுடியில் நேற்று நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தால் இதுவரை 11 அப்பாவிகள் பலியாகியுள்ளனர்

நிபா தாக்கி உயிரிழந்த நர்ஸ்: கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம்

கேரள மாநிலத்தில் உள்ள ஒருசில பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸ் தாக்கியதால் பலியாகும் கொண்டிருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது