”காவல்துறை உங்கள் நண்பன்” படக்குழுவின் அடுத்த படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
காவல்துறை உங்கள் நண்பன்” படக்குழுவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது
’காவல் துறை உங்கள் நண்பன்’ திரைப்படம் அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்ட நிலையில் இந்த குழுவினர்களின் அடுத்த படத்திற்கு “பி.ஈ. பார்” (B.E. BAR) என்ற டைட்டில் வைக்கப்பட்டுளது.
’காவல் துறை உங்கள் நண்பன்’ திரைப்படம் மனதை உலுக்கும் ஒரு பரபரப்பான கதைக்களத்தை கொண்டிருந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக “ஃபிரண்ட்ஷிப் காமெடி” எனும் புது ஜானரில் உருவாகவுள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளே இந்த படத்தின் கதி
மோ மற்றும் காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் நடித்த சுரேஷ் ரவி நாயகனாகவும், ‘சதுரங்க வேட்டை’ படத்தில் நடித்த இஷாரா நாயர் நாயகியாகவும் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.
காவல்துறை உங்கள் நண்பன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் RDM இப்படத்தை இயக்குகிறார். தொழில்நுட்பக் குழுவில் விஷ்ணு ஸ்ரீ K.S., ஆதித்யா & சூர்யா (இசை), வடிவேல் & விமல்ராஜ் (எடிட்டிங்), சிவராஜ் (கலை), கல்லூரி வினோத் (வசனம்), ஞானகரவேல் & கானா பிரபா (பாடல் வரிகள்) ஆகியோர் பணிபுரிகின்றனர்.
“பி.ஈ. பார்” (B.E. BAR) படத்தினை Absolute Pictures நிறுவனம் சார்பில் மால்கம், BR Talkies Corporation மற்றும் White Moon Talkies உடன் இணைந்து தயாரிக்கிறார். B. பாஸ்கரன், P. ராஜபாண்டியன், மற்றும் சுரேஷ் ரவி ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.
தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments