செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட காவேரி மருத்துவமனை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு செய்ய இருக்கும் பைபாஸ் அறுவை சிகிச்சை குறித்த முக்கிய அறிவிப்பை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவால் தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வது தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் காவேரி மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பரிசோதனைக்கு பின்னர் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments