இன்னும் அரை மணி நேரத்தில் கருணாநிதி குறித்த மருத்துவ அறிக்கை: பரபரப்பில் தமிழகம்

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக நேற்று மாலை செய்தி வந்ததில் இருந்தே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரபரப்பில் உள்ளது. கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கைக்கு பின்னர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்று இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும், அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பதை பொறுத்தே திமுக தொண்டர்களின் மனநிலை இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் காவேரி மருத்துவமனையில் கூடுதலாக 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் உயரதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

More News

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

எம்.எல்.ஏ ஆகிறார் நடிகர் சூர்யா

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே. திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் தொடங்கி இரவுபகலாக நடந்து வருகிறது.

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் பிரபல இந்தி நடிகர்?

தமிழ் படங்களில் கோலிவுட்டின் பிரபலங்கள் நடிப்பது அதிகரித்து வருகிறது. அஜித்தின் 'விவேகம்' படத்தில் விவேக் ஓபராயும், ரஜினியின் '2.0' படத்தில் அக்சயகுமாரும் நடித்துள்ள நிலையில்

காவேரி மருத்துவமனைக்கு நடிகர்கள் அர்ஜூன், வடிவேலு வருகை

சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலையில் நேற்று மாலை சிறிது பின்னடைவு ஏற்பட்டது.

கருணாநிதி தொடர்ந்து கவலைக்கிடம்: காவேரியில் குவியும் திமுக பிரமுகர்கள்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று மாலை அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.