இன்னும் அரை மணி நேரத்தில் கருணாநிதி குறித்த மருத்துவ அறிக்கை: பரபரப்பில் தமிழகம்

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக நேற்று மாலை செய்தி வந்ததில் இருந்தே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரபரப்பில் உள்ளது. கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கைக்கு பின்னர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்று இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும், அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்பதை பொறுத்தே திமுக தொண்டர்களின் மனநிலை இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் காவேரி மருத்துவமனையில் கூடுதலாக 300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் உயரதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.