கிறிஸ்துமஸ் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய திரைப்படம்: காரணம் இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிறிஸ்துமஸ் தினமான நாளை மாஸ் நடிகர்களின் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், ஒருசில சின்னபட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணியையும் செய்து கொண்டிருந்த ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் ‘காட்டேரி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இப்பொழுது நிலவும் குழப்பமான மற்றும் நிலையில்லாத்தன்மையை கருத்தில் கொண்டும், இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25-ஆம் தேதி வெளிவர இருக்கும் “காட்டேரி” திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் ‘காட்டேரி’ திரைப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது
#PressRelease#KatteriReleasepostponed pic.twitter.com/lk7AWrYCb9
— Studio Green (@StudioGreen2) December 23, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com