அந்த டாக்டர் ஏன் இவர்களுக்கெல்லாம் லட்டர் எழுதவில்லை? 'காட்டேரி' இயக்குனர் கேள்வி

  • IndiaGlitz, [Thursday,January 07 2021]

வரும் பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் சிம்புவின் ’ஈஸ்வரன்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது

ஆனால் இந்த அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, இது கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறும் செயல் என்றும் எனவே புதிய அரசாணை பிறப்பித்து 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் தொடர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது, இதனால் வரும் பொங்கல் தினத்தில் 100 சதவீத இருக்கைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் சமீபத்தில் மருத்துவர் ஒருவர் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்து அதனால் ஏற்படும் விளைவுகளையும் விளக்கமாக தனது பேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காட்டேரி இயக்குனர் டீகே தனது டுவிட்டரில் கூறியபோது, ‘திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை அனுமதிப்பதற்கு கண்டனம் தெரிவித்த அதே டாக்டர், ஏன் குளிரூட்டப்பட்ட பார்கள் மற்றும் கிளப்புகள் திறந்துவைக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் அவர்களுக்கு ஏன் கடிதம் எழுதவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 15 நிமிடத்தில் ஒரு கருத்தை சினிமாக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்து புகழ் பெறுவதே தற்போதைய டிரெண்ட் ஆக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இயக்குனர் டீகே சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் இயக்கிய ’காட்டேரி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது