'காற்றுக்கென்ன வேலி' சீரியல் நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் சக நடிகர்கள்..!

  • IndiaGlitz, [Friday,February 17 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றான ’காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியலில் நடித்து வந்த நடிகர் ஒருவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்து வருகின்றன என்பதும் அவற்றில் ஒன்று ’காற்றுக்கென்ன வேலி’ என்பது தெரிந்தது. குறிப்பாக இளம் ரசிகர்களை கவர்ந்த ’காற்றுக்கென்ன வேலி’ சீரியல் படிப்புக்கு தடை போடும் தந்தையை மீறி நாயகி எப்படி படித்து பட்டதாரி ஆகிறார் என்ற கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஒரு கேரக்டரில் நடித்து வந்த ஹரி என்பவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் ’காற்றுக்கென்ன வேலி’ சீரியல் குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஹரி எதற்காக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தற்போது தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.