திருமண வீடியோ இத்தனை கோடிக்கு விற்பனையா? நட்சத்திரத் திருமணம் குறித்து பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷால் திருமணம் நாளை நடைபெற இருக்கிறது. 7 ஆம் தேதி முதலே துவங்கிவிட்ட இந்த திருமண விழா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய நிலையில் தற்போது திருமண புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளின் ஒளிப்பரப்பு குறித்து மேலும் ஆச்சர்யமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
வெளிநாடுகளில் பிரபலங்கள் திருமணம் செய்துகொள்ளும்போது அந்த நிகழ்ச்சிக்கான வீடியோவை ஓடிடி போன்ற ஸ்டீரிமிங் நிறுவனங்களே பெரும்பாலும் வெளியிடும். அதற்காக பிரபலங்களுக்கு பெரும் தொகை அளிக்கப்படுவதும் வழக்கமாக இருந்துவருகிறது.
அதேபோன்று தற்போது கத்ரீனா மற்றும் விக்கி கௌஷால் திருமணத்தின் வீடியோ காட்சிகளை பிரபல ஓடிடி தளம் ஒன்று வெளியிடுவதற்கு பேரம் பேசியதாகவும் இதற்காக ரூ.100 கோடி வழங்க முன்வந்ததாகவும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. உறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை கத்ரீனா மற்றும் விக்கி கௌஷால் இருவரும் காதலித்து வந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் சவுத் மாதோபூர் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட அரண்மனையில் நாளை திருமணம் செய்துகொள்ள உள்ளனர். 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரண்மனை தற்போது ரிசார்ட் வடிவில் வடிமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 120 பேர் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த திருமண விழாவில் செல்போன்கள் முற்றிலும் தடைச்செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் கத்ரீனா கைஃப்- விக்கி கௌஷால் திருமணக் காட்சிகள் எப்போது வெளியாகும்? அதை யார் ஒளிப்பரப்புவார்கள்? ஒருவேளை இந்த ஜோடி தங்களது திருமண காட்சிகளை விற்கப்போகிறார்களா? போன்ற பல்வேறு சந்தேகங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து ரூ.100 கோடிக்கு திருமண வீடியோ பேரம் பேசப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout