ரூ.1 லட்சத்திற்கு ஸ்பெஷல் மெஹந்தி… பிரபல நடிகை திருமணம் குறித்த வைரல் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் நட்சத்திரமான கேத்ரினா கைஃப் தன்னைவிட 5 வயது குறைந்த நடிகர் விக்கி கௌசலை காதலித்து வருகிறார். விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ள போகிறது என்பதுபோன்ற தகவல் கடந்த சில தினங்களாக பேசப்பட்டது. உறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவல் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த திருமணத்தை பாலிவுட் வட்டாரம் உறுதிச்செய்து இருக்கிறது.
மேலும் நடிகை கேத்ரினா கைஃப்- விக்கி கௌசல் திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சவாய் மாதோபூரில் இருக்கும் சிக்ஸ் சென்ஸ் போர்ட் பர்வாரா ரெசார்டில் நடக்க இருப்பதாகவும் அழகிய பசுமை போர்த்திய நிலப்புரப்புடன் காட்சியளிக்கும் இந்த ரெசார்ட் 700 ஆண்டு பழமைவாய்ந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும் தங்களது திருமணத்தில் விருந்தினர்களுக்கு செல்போன் அனுமதியில்லை என்று நடிகை கேத்ரினா மற்றும் விக்கி இருவரும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்து மற்றும் கத்தோலிக்க முறைப்படி நடக்கும் இந்த திருமணம் டிசம்பர் 7,8 மற்றும் 9 ஆகிய 3 நாட்களில் நடைபெற இருக்கிறது. இதைத்தவிர இத்திருமணத்தைக் குறித்து இன்னொரு சுவாரசியத் தகவலும் தற்போது சோஷியல் மீடியாவில் உலாவரத் துவங்கியுள்ளது.
அதாவது நடிகை கேத்ரினா தனது திருமணத்திற்குப் பயன்படுத்தப்படும் மெஹந்தியை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த பாலி மாவட்டத்தில் இருந்து வரவழைப்பார் என்றும் அங்குள்ள சோஜாத் இளைஞர்கள் ரசாயனம் கலக்காத சுத்தமான மெஹந்தியை கேத்ரினாவிற்காக உற்பத்தி செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த மெஹந்தியின் விலை கிட்டத்தட்ட 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரை இருக்கும் என்றும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதையடுத்து ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளிப்பத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com