திருமணத்திற்குப் பிறகு மாலத்தீவு பறந்த நடிகை கத்ரினா.. தேனிலவு கொண்டாட்டமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விக்கி கவுசால்- நடிகை கத்ரினா கபூர் திருமணம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது நடிகை கத்ரினா மாலத்தீவில் இருப்பதுபோன்ற புகைப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் தேனிலவு கொண்டாட்டமா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாலிவுட்டின் நட்சத்திர நடிகையான கத்ரினா தன்னைவிட 5 வயது குறைந்த நடிகர் விக்கி கவுசாலை காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து தேனிலவுக்கு இந்த ஜோடி எங்கே செல்வார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நடிகர் விக்கி கவுசால் இந்தூரில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதேநேரத்தில் நடிகை கத்ரினா தற்போது மாலத்தீவுக்குச் சென்றுள்ளார். வேலை காரணமாக அங்கே சென்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில் மாலத்தீவின் இயற்கை அழகை ரசித்தபடி அவர் பல பிகினி புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு வருகிறார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் விக்கி எங்கே எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் நடிகை கத்ரினா பதிவிட்ட அவரது பிகினி புகைப்படங்கள் அதிகளவு கமெண்ட்ஸ்களை பெற்று வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments