close
Choose your channels

என்னுடைய முதல் படப்பிடிப்பு விஜய்யுடன் தான்..  காத்ரீனா   கைஃப் சொன்ன ஆச்சரிய தகவல்..!

Tuesday, July 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் முதன் முதலில் நான் கேமரா முன் தோன்றியது நடிகர் விஜய்யுடன் தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான காத்ரினா கைஃப் கிட்டத்தட்ட அனைத்து பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார் என்பது தெரிந்தது. சமீபத்தில் கூட விஜய் சேதுபதி நடித்த ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் முதல் முதலாக கேமரா முன் நடித்தது விஜய்யுடன் தான் என்று தனது மலரும் நினைவுகளை தெரிவித்து இருந்தார். ஊட்டியில் நடந்த ஒரு விளம்பர படப்பிடிப்பின் போது நானும் விஜய்யும் சேர்ந்து நடித்தோம் என்றும் அப்போதே விஜய் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராக இருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த விளம்பர படப்பிடிப்பின் போது தான் உட்கார்ந்து மொபைல் பார்த்துக் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது என் அருகே ஒருவர் வந்தது போல் இருந்த நிலையில் நான் அவரை கவனிக்கவில்லை என்றும், நீண்ட நேரமாக அவர் என் அருகில் நின்று கொண்டிருப்பதை அறிந்த நான் மேலே அண்ணாந்து பார்த்தபோது தான் விஜய் என தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார் என் அருகில் இவ்வளவு நேரம் காத்திருந்ததை நினைத்து நான் அவருடைய எளிமையை நினைத்து ஆச்சரியமடைந்தேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

விஜய் மற்றும் காத்ரீனா கைஃப் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குளிர்பான விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment