விஜய்சேதுபதி பட தாமதத்திற்கு பிரபல நடிகை தான் காரணமா?

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாலிவுட்டில் அவர் ஏற்கனவே ’மும்பைகார்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்

விஜய் சேதுபதியுடன் காத்ரீனா கைப் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் திடீரென நாயகி கத்ரீனா கைப் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இரண்டாவது வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இவர் ஏற்கனவே ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஜய் சேதுபதி பல திரைப்படங்களுக்கு தேதியை ஒதுக்கியுள்ள நிலையில் மீண்டும் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்திற்கு எப்போது தேதியை ஒதுக்குவார் என்பதை படக்குழுவினர் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.