திருமணம் முடிந்த கையோடு கணவனுக்காக அல்வா செய்த பிரபல நடிகை!

  • IndiaGlitz, [Saturday,December 18 2021]

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வரும்வரும் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷால் இவர்களது திருமணம் கடந்த 9 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நடிகை கத்ரீனா தனது புகுந்த வீட்டு உறவினர்களாக ஆசையோடு அல்வா செய்து கொடுத்துள்ளார். அதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை கத்ரீனா தன்னைவிட 5 வயது இளையவரான நடிகர் விக்கி கௌஷாலை காதலித்து வந்தார். இதையடுத்து கடந்த 9 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள 700 வருடப்பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் இருவரும் உறவினர்கள் மத்தியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்தத் திருமணத்திற்கு பிரபலங்கள், நடிகர், நடிகைகள் என வெறுமனே 120 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக்கொண்ட இந்த ஜோடி தங்களது திருமண வீடியோ ஒளிப்பரப்பு உரிமையை ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்திற்கு ரூ.80 கோடி ரூபாய்க்கு விற்றது குறித்த தகவல் வெளியானது. இதையடுத்து கூடிய விரைவில் மும்பையில் இவர்களது திருமண வரவேற்பு விழா நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை கத்ரீனா தனது புகுந்த வீட்டு உறவினர்களுக்காக இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளுள் ஒன்றான அல்வாவை செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக அதற்கு நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

More News

மக்கள் ஜாதகத்தையே மாத்தி எழுதியிருவாங்க: பிக்பாஸ் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 76வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரோமோவில் கமல் தோன்றும் காட்சியின் புரோமோ விடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சோகத்திலும் சக வீரர்களிடம் சேட்டை செய்து விளையாடிய கேப்டன்… வைரல் புகைப்படம்!

3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள் தென்ஆப்பிரிக்கா

உயிரைக் காப்பாற்றிய டிராபிக் போலீஸ்க்கு நன்றி தெரிவித்த சச்சின்…நடந்தது என்ன?

இந்தியக் கிரிக்கெட்டில் ஜாம்பவனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்,

ஒரே ஷாட்டில் 5 நிமிட காட்சிகள்: 'மாநாடு' சிம்புவின் அசத்தல் வீடியோ!

 'மாநாடு'  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்னும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த பாலிவுட் பிரபலமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார்