காத்ரீனாவின் அம்மா தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கின்றார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,March 20 2018]

பாலிவுட்டின் பிரபல நடிகை காத்ரீனா கைப் குறித்த படங்களின் செய்திகளை விட அவரது காதல் கிசுகிசுக்கள் குறித்த செய்திகள் தான் அதிகம் வெளிவரும். தற்போதைய நிலவரப்படி அவர் சல்மான்கானின் காதலியாக இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டுகிறது.

இந்த நிலையில் விரைவில் காத்ரீனா கைஃப் தமிழகத்திற்கு வரவுள்ளாராம். கோலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்காக அல்ல, அவரது அம்மா இங்கேதான் பல வருடங்களாக பணிபுரிந்து கொண்டிருப்பதாகவும், அவரை பார்ப்பதற்காகத்தான் காத்ரீனா கைப் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆம், காத்ரீனாவின் அம்மா, சுசாணே என்பவர் திண்டுக்கல் அருகே உள்ள மவுன்டெய்ன் வியூ என்ற பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஏழை குழந்தைகளுக்காக அறக்கட்டளை ஒன்று நடத்தி வரும் இந்த பள்ளியில் தான் ஆசிரியை சேவையை சுசாணே செய்து வருவதாகவும், அவரை பார்க்கவே காத்ரீனா விரைவில் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு பெரிய நடிகையின் அம்மாவாக இருந்தும், அவரது சேவை மனப்பான்மை உண்மையில் பாராட்டத்தக்கது.

More News

யுவன், மெட்ரோ சிரிஷை பாராட்டிய சிம்பு

மெட்ரோ நாயகன் சிரிஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘நா யாருன்னு தெரியுமா?’ என்ற பாடல் மார்ச் 15-ம் தேதி வெளியிடப்பட்டு அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏப்ரல் 14ல் கட்சி பெயர், கொடி அறிவிக்கப்படுமா? ரஜினிகாந்த் பதில்

கடந்த சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள 10க்கும் மேற்பட்ட பெயர்களை ஒன்றை அவர் தேர்வு தனது கட்சியின் பெயரை ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு

கமல் குற்றச்சாட்டுக்கு ரஜினி கூறிய பதில்

தமிழக அரசியல் களத்தில் மிக விரைவில் குதிக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியை கிட்டத்தட்ட விமர்சனம் செய்யாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அவர் மீது விமர்சனங்கள் அள்ளி தெளிக்கப்படுகிறது

என் பின்னால் இருப்பது ஒரே ஒருவர் தான்: சென்னை திரும்பிய ரஜினி

ரஜினி குறித்து பெரும்பாலானோர் செய்து வரும் விமர்சனம் அவரது பின்னால் பாஜக இருக்கின்றது என்பதுதான். இன்று இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இதற்கு பதிலளித்தார்.

யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு: கமல்ஹாசன்

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கிளம்பிய ராமராஜ்ய ரதயாத்திரை, அதன்பின்னர் மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம் உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்தது.