காத்ரீனாவின் அம்மா தமிழ்நாட்டில் என்ன செய்து கொண்டிருக்கின்றார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,March 20 2018]

பாலிவுட்டின் பிரபல நடிகை காத்ரீனா கைப் குறித்த படங்களின் செய்திகளை விட அவரது காதல் கிசுகிசுக்கள் குறித்த செய்திகள் தான் அதிகம் வெளிவரும். தற்போதைய நிலவரப்படி அவர் சல்மான்கானின் காதலியாக இருந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டுகிறது.

இந்த நிலையில் விரைவில் காத்ரீனா கைஃப் தமிழகத்திற்கு வரவுள்ளாராம். கோலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்காக அல்ல, அவரது அம்மா இங்கேதான் பல வருடங்களாக பணிபுரிந்து கொண்டிருப்பதாகவும், அவரை பார்ப்பதற்காகத்தான் காத்ரீனா கைப் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆம், காத்ரீனாவின் அம்மா, சுசாணே என்பவர் திண்டுக்கல் அருகே உள்ள மவுன்டெய்ன் வியூ என்ற பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஏழை குழந்தைகளுக்காக அறக்கட்டளை ஒன்று நடத்தி வரும் இந்த பள்ளியில் தான் ஆசிரியை சேவையை சுசாணே செய்து வருவதாகவும், அவரை பார்க்கவே காத்ரீனா விரைவில் வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு பெரிய நடிகையின் அம்மாவாக இருந்தும், அவரது சேவை மனப்பான்மை உண்மையில் பாராட்டத்தக்கது.