close
Choose your channels

கத்ரீனா - விக்கி திருமணத்திற்கு வந்த பரிசுப்பொருட்களின் மதிப்பு இத்தனை கோடியா?

Thursday, December 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது என்பதும் பிரம்மாண்டமான முறையில் நடந்த இந்த திருமணத்தில் பாலிவுட் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

திருமண புகைப்படம் மற்றும் திருமணத்திற்கு பின்னர் எடுத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் காத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் திருமணத்திற்கு கிடைத்த காஸ்ட்லியான பரிசு பொருட்கள் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் 3 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் என்ற காரை காத்ரீனா-விக்கி தம்பதிக்கு தனது திருமண பரிசாக அளித்துள்ளார். அதேபோல் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் 2.7 கோடி மதிப்பிலான வைர நெக்லஸ் திருமண பரிசாக அளித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் ஷாரூக்கான், ஹிருத்திக் ரோஷன், ஆலியா பட் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ள பரிசுப்பொருட்களை அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மொத்தத்தில் காத்ரீனா கைப் - விக்கி கௌஷல் திருமணத்திற்கு வந்த பரிசு பொருட்களின் மதிப்பு மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுவதால் திரையுலகம் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment