பேருந்து படிக்கட்டில் நயன், சமந்தாவுடன் விஜய்சேதுபதி: 'வலையோசை' பாடல் ரீமேக்கா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பேருந்து படிக்கட்டில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர்களுடன் விஜய்சேதுபதி நிற்பது போன்ற காட்சி உள்ளது. இதுகுறித்த வீடியோவில் பின்னணியில் ’வளையோசை கலகலகல’ என்ற பாட்டு ஒலிப்பதால் இந்த பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
‘சத்யா’ திரைப்படத்தில் அமலா உடன் கமல்ஹாசன் இதேபோன்று படிக்கட்டில் பயணம் செய்யும் போதுதான் இந்த பாட்டு இடம் பெறும் என்பதும் அதே போன்று இந்த பாடலில் விஜய் சேதுபதியுடன் நயன்தாரா மற்றும் சமந்தா செல்வது போன்று எடுக்கப்பட்ட இருந்தால் நிச்சயம் திரையில் இந்த பாடலை பார்க்கும்போது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்துவிடும் என்றும் இதனை அடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி அடுத்த வருடம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Vijay Sethupathi, Nayanthara and Samantha.??#KaathuVaakulaRenduKaadhal pic.twitter.com/y507LOW7Ak
— ???????????????? (@ppwrites) August 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments