விஷாலின் 'கத்திச்சண்டை' எப்போது முடியும் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,May 04 2016]
விஷால் நடித்த 'மருது' மற்றும் 'மதகஜராஜா' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் விஷால் அடுத்து சுராஜ் இயக்கத்தில் 'கத்திச்சண்டை' என்ற படத்திலும் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

நேற்று 'கத்திச்சண்டை' படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விஷால், தமன்னா, வடிவேல், சூரி உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான 'திமிறு' படத்திற்கு பின்னர் விஷால் படத்தில் வடிவேலு மீண்டும் காமெடி நடிகராக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆகஸ்ட்டில் கமல்ஹாசனின் அடுத்த படம்

உலக நாயகன் கமல்ஹாசன், மகள் ஸ்ருதிஹாசனுடன் முதன்முதலில் நடிக்கவுள்ள 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு வரும் 16ஆம்...

நயன்தாராவுக்கு இதுதான் முதல்முறை

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேல் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல்வேறு கெட்டப்புகளில்...

ஜூன் 8 முதல் மேலும் ரூ.100 கோடி வசூல் செய்ய காத்திருக்கும் 'பாகுபலி'

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான 'பாகுபலி' திரைப்படம் ஏற்கனவே ரூ.600 கோடி வசூல் செய்து தென்னிந்தியாவில் மிக அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில் தற்போது அந்த படம் மேலும் ரூ.100 கோடியை வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது....

விக்ரமுடன் கருத்துவேறுபாடா? சூர்யாவின் பதில்

சீயான் விக்ரமுடன் நடிகர் சூர்யா பிதாமகன்' படத்தில் இணைந்து நடித்திருந்தபோதிலும் இருவருக்கும் இடையே சமீபகாலமாக கருத்துவேறுபாடு...

அஜித்துக்கு விஜய் அம்மா கூறிய அறிவுரை

'தல' அஜித் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு கோலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்...