'கத்தி' தெலுங்கு ரீமேக்கின் டைட்டில் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Monday,April 04 2016]
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய், சமந்தா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'கத்தி'. இந்த படத்தின் ரீமேக்கில்தான் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். விவசாயிகளின் தற்கொலை, அரசியல் மற்றும் சமூக அவலங்கள் குறித்து இந்த படம் அலசுவதால் இந்த படம் தனக்கு பொருத்தமாக இருக்கும் என்று சிரஞ்சீவி தனது 150வது படமாக இந்த படத்தை தேர்வு செய்துள்ளார்.

வி.வி.விநாயக் இயக்கவுள்ள இந்த படத்தில் விஜய் நடித்த இரு வேடங்களில் சிரஞ்சீவியும் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடிக்கவுள்ளனர். ராம்சரண் தேஜா மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 'கத்திலாண்டொடு (Kathilantodu) என்பதுதான் இந்த படத்தின் டைட்டில் என்றும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் புதிய கெட்டப்பில் சிரஞ்சீவி தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் முன்னணி ஹீரோயின்

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான 'ரஜினிமுருகன்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றி அந்த படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை முன்னணி நடிகர்களின்...

கார்த்தியை இயக்கும் விஜய்யின் வெற்றி இயக்குனர்

இளையதளபதி விஜய் கேரியரில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆக்ஷன் படம் என்றால் முதல் வரிசையில் இருப்பது 'போக்கிரி'தான்...

காலையில் சென்னை. மாலையில் ஐதராபாத். சூர்யாவின் மெகா திட்டம்

மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதை...

'விஜய் 60' படத்தில் மற்றொரு பிரபல வில்லன்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 60'...

அதிமுக வேட்பாளர் பட்டியலில் இரண்டு கோலிவுட் நடிகர்கள்

பிரபல காமெடி நடிகரும் நடிகர் சங்கத்தின் துணை தலைவருமான கருணாஸ் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம்...