close
Choose your channels

'கத்தி' ரீமேக்கில் சதீஷ் கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்

Thursday, June 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் நடித்த இரண்டு வேடங்களில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சமந்தா நடித்த நாயகி வேடத்தில் நடிக்க அனுஷ்கா அல்லது நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சிரஞ்சீவியின் பிறந்த நாளில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காமெடி மற்றும் சப்போர்ட்டிங் கேரக்டராக தமிழில் சதீஷ் நடித்திருந்த முக்கிய கேரக்டரில் நடிக்க அலி ஒப்பந்தமாகியுள்ளார். தன்னுடைய கேரக்டரில் நடிக்க இவரை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவின் 150வது படமான இந்த படமான இந்த படத்தை வி.வி.விநாயக் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment