இளையதளபதியுடன் மீண்டும் இணைகிறதா 'கத்தி' டீம்?

  • IndiaGlitz, [Wednesday,January 25 2017]

இளையதளபதி விஜய் நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த 'கத்தி' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போதுகூட இந்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய், முருகதாஸ், லைகா கூட்டணி மீண்டும் இணைந்து 'கத்தி' போன்ற இன்னொரு திரைப்படத்தை தரவேண்டும் என்று விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய விருப்பத்தை கடந்த சில மாதங்களாக தெரிவித்து வந்தனர்.

விஜய் ரசிகர்களின் இந்த விருப்பம் விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள 'விஜய் 61' படத்திற்கு பின்னர் லைகா நிறுவனம் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'விஜய் 62' உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் கோலிவுட்டில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

More News

அது எங்களோட வேலையில்லை. கமலுக்கு பீட்டா சி.இ.ஓ பதில்

ஜல்லிகட்டு பிரச்சனை சட்ட முன்வடிவின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டாலும், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் காவல்துறையின் தடியடி, முதல்வரின் நடவடிக்கை, பீட்டா தடை குறித்து பல கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் தைரியமாக முன்வைத்தார்...

இணையதளத்தில் வைரலாகும் பிரபல தமிழ் நடிகையின் நிர்வாண புகைப்படம்

தமிழில் 'கேடி' படத்தில் அறிமுகமான பிரபல நடிகை இலியானா, விஜய் நடித்த 'நண்பன்' உள்பட ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார்

கமல் கருத்து முட்டாள்தனமானதா? சுப்பிரமணியன் சுவாமிக்கு கமல் ரசிகர்கள் பதிலடி

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, போராட்டக்காரர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசியிருக்க வேண்டும் என்றும், எம்ஜிஆர் இருந்திருந்தால் நிச்சயம் அதை செய்திருப்பார் என்றும் கூறியிருந்தார்...

இளையதளபதியின் 'பைரவா' தமிழக வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த பொங்கல் திருநாள் விருந்தாக வெளியான நிலையில் இந்த படத்தின் சென்னை வசூல் ரூ.5.74 கோடி என்பதை நேற்று பார்த்தோம்.

ஓபிஎஸ் எப்போது கேரளாவுக்கு முதலமைச்சர் ஆனார்?

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்களை இன்று கேரள முதலமைச்சர் பிணராய் விஜயன் சந்தித்து பேசினார்...