'கபாலி'க்கு அடுத்த வாரம் 'கத்திச்சண்டை'

  • IndiaGlitz, [Wednesday,July 20 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் மிகப்பெரிய பிரமாண்டங்களுடன் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் அதாவது ஜூலை 29ஆம் தேதி விஷாலின் 'கத்திச்சண்டை' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசர் மற்றும் ஆடியோ வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்களின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விஷால் நடித்த 'ஆம்பள' மற்றும் 'கதகளி' படங்களுக்கு ஆதி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கியுள்ள 'கத்திச்சண்டை' படத்தில் விஷால், தமன்னா, ஜெகபதிபாபு, தருண் அரோரா, வடிவேலு, சூரி, சம்பத்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.நந்தகோபால் அவர்களின் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் மற்றும் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.