close
Choose your channels

சிம்புவின் 'AAA'வில் எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜய் பட நடிகர்

Thursday, July 21, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மூன்று வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிம்புவின் ஒரு கேரக்டருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகின்றார். மற்ற இரண்டு ஹீரோயின் தேர்வு நடைபெற்று வருகிறது. 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் தற்போது புதியதாக 'ராகுல் தாத்தா' இணைந்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'நானும் ரெளடிதான்' படத்தில் விஜய்சேதுபதி குரூப்பில் உள்ளவர்களில் ஒருவராக நடித்திருந்த இவர் காமெடியில் கலக்கினார் என்பதை ஏற்கனவே அறிவோம்.
74 வயதான 'ராகுல் தாத்தா', எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' படத்தில் அடிமைகளில் ஒருவராக நடித்தவர் என்பதும் இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்திலும் வயதானவர்களில் ஒருவராக இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment