வாடகைத்தாய் மூலம் குழந்தை பெத்துக்கிலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கா: 'யூகி' டிரைலர்

  • IndiaGlitz, [Sunday,November 13 2022]

கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடித்த ’பரியேறும் பெருமாள்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் ‘யூகி’. இந்த படம் வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் டிரைலர் வீடியோ இணையதளங்களில் வைரலாக பெறுகிறது. இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த டிரைலரில் திடீரென ஒரு பெண் மர்மமாக மறைந்து விடுகிறார் என்றும் அவளைப் பற்றி சேகரிக்கும் செய்திகள் அனைத்தும் பொய்யாக இருக்கிறது என்றும் காவல்துறையினர் கண்டுபிடிக்கின்றனர். காணாமல் போன அந்த பெண்ணை கண்டு பிடித்தார்களா? என்பதுதான் இந்த படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் இந்த படத்தில் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் வாடகைத்தாய் குறித்த பிரச்சினையும் அலசப்பட்டு உள்ளது என்பது டிரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

கதிர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நரேன், நட்டி நட்ராஜ், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, பிரதாப் போத்தன், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் ஜாமின் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ரஞ்சின் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்த படம் நவம்பர் 18-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமண தேதி எப்போது? 

தமிழ் திரைஉலகில் ஏற்கனவே பல நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் சமீபத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்கள் காதலை வெளிப்படுத்தினார்

தனலட்சுமி 'பளார்' என்ற அறை வாங்குவார் என கமல் முன் கூறிய அசீம்! என்ன காரணம்?

தனலட்சுமி இங்கே நடந்து கொள்வது போன்று வெளியில் நடந்து கொண்டால் 'பளார்' என்று அறை தான் வாங்குவார் என கமல்ஹாசன் முன்னிலையில் அசீம் கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கார்த்தியின் 'ஜப்பான்' படம்: சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

 கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் 'ஜப்பான்'  என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜையுடன்

வீட்டிற்குள் 2 அடியில் தண்ணீர்: இசையமைப்பாளரின் புகாருக்கு தமிழக அமைச்சரின் பதில்!

 சென்னையில் பெய்த கனமழை காரணமாக தனது வீட்டிற்குள் மழைநீர் புகுந்து விட்டது என்றும் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது என்றும் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில்

ஜிலேபி கொடுத்த நபர் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவு செய்த சமந்தா: வைரல் வீடியோ

 நடிகை சமந்தா தனக்கு ஜிலேபி குறித்த நபர் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரலாகி வருகின்றன.