'ஏதோ பிரச்சனை இருக்குன்னு மட்டும் தெரியுது.. கதிர் நடித்த 'யூகி' டீசர் ரிலீஸ்

  • IndiaGlitz, [Tuesday,November 01 2022]

பரியேறும் பெருமாள், விஜய் நடித்த பிகில் உள்பட பல திரைப்படங்களில் நடித்த கதிர் நடித்த ‘யூகி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது.

ஒரு பெண் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள நிலையில் அந்த பெண்ணை கண்டுபிடிக்க போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில் கதிர் தனியாளாக நின்று அந்த பெண்ணை கண்டுபிடித்து அவரின் பின்னால் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதுதான் ‘யூகி’ படத்தின் கதை என இன்று வெளியாகியுள்ள டீசரில் இருந்து தெரிய வருகிறது.

கதிர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நரேன், நட்டி நட்ராஜ், கயல் ஆனந்தி, பவித்ரா லட்சுமி, பிரதாப் போத்தன், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு புஷ்பராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் ஜாமின் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ரஞ்சின் ராஜ் என்பவர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் நவம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் 'விக்ரம்' பட ரகசியத்தை போட்டு உடைத்த மைனா!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மகேஸ்வரி மற்றும் மைனா ஆகிய இருவருமே நடித்து இருந்தனர் என்பதும்

கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தென்கொரியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரும் நடிகருமான லீ ஜிஹான்(24) உயிரிழந்துள்ளார்.

பிக்பாஸ் ஆயிஷாவுக்கு எத்தனை காதலர்கள்? எத்தனை திருமணம்? முன்னாள் காதலர் கூறிய திடுக் தகவல்!

 பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷாவின் முன்னாள் காதலர் பேட்டி அளித்திருக்கும் நிலையில் அந்த பேட்டியில் அவர் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முரை திருமணம்

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரரின் தந்தை!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே