'கதாநாயகன்', 'நெருப்புடா' படங்களின் முதல் நாள் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Saturday,September 09 2017]

 

நேற்று வெளியாகியுள்ள விஷ்ணுவிஷாலின் 'கதாநாயகன்' மற்றும் விக்ரம்பிரபுவின் 'நெருப்புடா' ஆகிய இரு படங்களுமே அந்தந்த படங்களின் ஹீரோக்கள் தயாரிப்பில் உருவானது, மேலும் இந்த இரு படங்களுக்கும் இசையமைத்தவர் சீன்ரோல்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த இரு படங்களின் முதல் நாள் சென்னை வசூல் குறித்து தற்போது பார்ப்போம். விஷ்ணுவின் 'கதாநாயகன்' சென்னையில் நேற்று ரூ.17 லட்சமும், விக்ரம்பிரபுவின் 'நெருப்புடா' ரூ.14 லட்சமும் வசூல் செய்துள்ளது. இன்று மற்றும் நாளைய வசூலை பொறுத்தே இந்த படங்களின் ரிசல்ட் தெரியவரும்

இந்த நிலையில் மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் அஜித்தின் 'விவேகம்' படம் நேற்று சென்னையில் ரூ.8 லட்சம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.