close
Choose your channels

ஒரே நாளில் வெளியாகும் 2 பாண்டியராஜ் படங்கள்

Friday, March 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பசங்க' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தற்போது முன்னணி இயக்குனராக இருக்கும் பாண்டியராஜ் இயக்கிய 'பசங்க 2' திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியிலும், 'கதகளி' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்திலும் வெளியாகியது. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி படங்களாக ஜொலித்தது.


இந்நிலையில் 'பசங்க 2' மற்றும் 'கதகளி' ஆகிய இரண்டு படங்களின் தெலுங்கு டப்பிங் வரும் 18ஆம் தேதி தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பர போஸ்டர்கள் சமூக இணையதளங்களில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. ஒரே இயக்குனரின் இரண்டு டப்பிங் படங்கள் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.


இந்நிலையில் பாண்டியராஜ் இயக்கிய மற்றொரு திரைப்படமான 'இது நம்ம ஆளு' திரைப்படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் இயக்கிய 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment