நான் கார் ஓட்டிகிட்டே தாய்ப்பால் கொடுத்திருக்கேன்: அமெரிக்க மாடலுக்கு போட்டியாக தமிழ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் அமெரிக்காவின் மாடல் அழகி மாரா மார்ட்டின் என்பவர் தனது ஐந்து மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே ராம்ப்வாக் செய்தார். இதுகுறித்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியது மட்டுமின்றி மாரா மார்ட்டினுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்தது. தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே தான் இவ்வாறு செய்ததாகவும் இதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் மாரா மார்ட்டின் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நான் கார் ஓட்டிகிட்டே , சமைச்சுக்கிட்டே, பஸ்ஸுல, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே எல்லா சந்தர்ப்பத்துலயும் பால் குடுத்துருக்கேன். மேடையில ஒரு வினாடிவினா போட்டியில பங்கெடுத்துகிட்டே பால் கொடுத்திருக்கேன். கனடாவுல ஒரு எம்பி தாய்ப்பால் கொடுத்துக்கிட்டே நாடாளுமன்ற வோட்டெடுப்புல கலந்துக்கிட்டாங்க என்று கூறியுள்ளார்.
மேலும் 'அமெரிக்காவுல குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டே ராம்ப்வாக் செய்யும் பெண்ணை கைத்தட்டி வரவேற்கிறார்கள் . நம்ம ஊருல? கைகொட்டி சிரிப்பார்கள். ஏன்னா நாம தமிழ்டா இந்தியாடா . தாயின் மார்பு கூட காமப்பொருள்தான், காட்டினா எங்க கலாச்சாரம் காத்துல பறந்துரும்' என்று கஸ்தூரி இன்னொரு டுவீட்டில் கூறியுள்ளார். வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த டுவீட்டுக்களுக்கு ஆதரவை விட எதிர்ப்பு அதிகமாக இருந்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments