சூர்யாதேவியை முதல்ல காப்பாத்தணும்: கஸ்தூரி ஆவேசம்

வனிதா திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூர்யாதேவி, கஸ்தூரி உள்பட 4 பேர் மீது வடபழனி காவல் நிலையத்தில் நடிகை வனிதா புகார் செய்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு சூர்யாதேவியை விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்துள்ளனர். இன்று மாலை அவர் நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நான் தற்போது தான் தூங்கி எழுந்தேன். எழுந்தவுடன் நான் உள்பட 4 பேர் மீது வனிதா புகார் அளித்துள்ள செய்தியும், சூர்யா தேவி கைது செய்யப்பட்டு செய்தியையும் பார்த்தேன்

என் மீது உள்ள புகார் காமெடியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அது ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் தற்போது முதல் வேலையாக சூர்யாதேவியை காப்பாற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு மீண்டும் வருகிறேன்’ என்று கஸ்தூரி கூறி உள்ளார். சூர்யா தேவியை காப்பாற்ற கஸ்தூரி என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்