விஜய்க்கு வயசே ஆகாதா? 'பீஸ்ட்' செகண்ட்லுக் குறித்து பிக்பாஸ் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 65வது திரைப்படத்திற்கு ‘பீஸ்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் அது மட்டுமின்றி டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று விஜய்யின் பிறந்தநாளை அடுத்து விஜய் ரசிகர்களுக்கு இரண்டாவது விருந்தாக நள்ளிரவு 12 மணிக்கு ‘பீஸ்ட்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. முதல் போஸ்டர் போலவே இந்த போஸ்டரில் விஜய் கையில் துப்பாக்கியும், வாயில் சிகரெட்டையும் வைத்திருந்தது அட்டகாசமாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த இரண்டு போஸ்டர்களும் நேற்று சமூக வலைதளங்களில் விடியவிடிய ட்ரெண்டில் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது லுக் குறித்து நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி கூறியபோது ’ஒவ்வொரு வருடமும் விஜய்க்கு பிறந்த நாள் வருது, ஆனால் வயசு ஆக மாட்டேங்குது’ என்று குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.
Birthday varuthu, aanaa vayase aava maatenthu.????
— Kasturi Shankar (@KasthuriShankar) June 21, 2021
Happy birthday @actorvijay https://t.co/Mk9iFI4ESH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com