இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த இரண்டு நாட்களாக தெய்வப்புலவர் திருவள்ளுவர் எந்த மதம்? அவருடைய உடை எந்த வண்ணம்? என திராவிட கட்சிகளும் பாஜகவும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உள்ள திருவள்ளுவரின் உருவமே கற்பனையாது என்பது தெரிந்தும், அவருக்கு காவிச்சாயம் பூசுவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் என திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை மக்கள் வெறுப்புடன் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் எந்த ஒரு சமூக பிரச்சனைக்கும் தனது மனதில் தோன்றுவதை தைரியமாக சொல்லும் நடிகை கஸ்தூரி இதுகுறித்து கூறியபோது, ‘வெள்ளை உடை என்றாலும் ஓகே, காவி வஸ்திரம் என்றாலும் ஓகே...- திருவள்ளுவர் பச்சை தமிழன் என்று குறிக்க பச்சை உடை போட்டாலும் ஓகே. எந்த உடையா இருந்தா என்ன, எந்த மதமா இருந்தா என்ன. இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு...
திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து. துறவின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல. இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா? என்று பதிவு செய்துள்ளார்.
வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து கருத்துக்கள் எழுந்து வருகின்றன.
வெள்ளை உடை என்றாலும் ஓகே, காவி வஸ்திரம் என்றாலும் ஓகே...- திருவள்ளுவர் பச்சை தமிழன் என்று குறிக்க பச்சை உடை போட்டாலும் ஓகே. எந்த உடையா இருந்தா என்ன, எந்த மதமா இருந்தா என்ன. இதெல்லாம் ஒரு பிரச்சினைன்னு.... #tiruvalluvar
— Kasturi Shankar (@KasthuriShankar) November 4, 2019
இங்கேயும் வெறுப்பு அரசியலா ? எப்பிடி இப்பிடி யோசிக்க முடியுது? ஒருவேளை தமிழ்நாட்டில் அய்யர்கள் இல்லாம போயிட்டா அப்புறம் பகுத்தறிவு பார்ப்பனதுவேஷிகள் பிழைப்புக்கு என்ன பண்ணுவீங்க ?
— Kasturi Shankar (@KasthuriShankar) November 4, 2019
2/2
— Kasturi Shankar (@KasthuriShankar) November 4, 2019
இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைச்சிருமா ? #போயி_புள்ளகுட்டிங்கள_படிக்க_வையுங்க
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com