என் கணக்கு தப்பாய் போனதில் ரொம்ப மகிழ்ச்சி: கஸ்தூரி டுவீட்
- IndiaGlitz, [Monday,May 04 2020]
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இன்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்துள்ள நிலையில் இன்று முதல் தமிழகத்தில் ஒரு சில தளர்வுகளும் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி தனிக் கடைகள் இயங்கும் சமூக இடைவெளியை பயன்படுத்தி ஒரு சில அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் டாஸ்மாக் கடையும் திறக்கப்படுமோ என்ற ஐயம் பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் இருந்தது. ஆனால் நல்ல வேளையாக அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளிவந்தபோதிலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு இன்னும் அறிவிப்புகள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: டாஸ்மாக் கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி
புதுச்சேரி முழுதும் green/ orange zone என்ற நிலையிலும், மது விற்பனை இல்லை என்ற முடிவெடுத்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு நன்றி. பொறுப்பான முடிவு. தமிழகத்திலிருந்து பலரும் காரைக்காலுக்கும் பாண்டிச்சேரிக்கும் படையெடுத்து தொற்று பரப்பும் அபாயத்தை முளையிலேயே கிள்ளி விட்டார்’என்று நடிகை கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த கருத்துக்கு டிவிட்டர் பயனாளிகள் தங்கள் பாணியில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
டாஸ்மாக் கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி நன்றி.
— Kasturi Shankar (@KasthuriShankar) May 3, 2020
நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.
தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி ! @CMOTamilNadu @PThangamanioffl