ரஜினி மகள் கொடுத்த ரூ.1 கோடி குறித்து கஸ்தூரியின் கமெண்ட்!  

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அதிக செலவீனம் அரசுக்கு இருப்பதாகவும் எனவே அரசுக்கு உதவிடும் வகையில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தமிழக அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா தனது கணவருடன் சேர்ந்து முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ரூபாய் 1 கோடிக்கான காசோலையை கொடுத்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மகள் ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்தது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியபோது, ‘ரஜினிகாந்தின் மருமகன் விசாகன் மற்றும் அவருடைய தந்தை சூலூர் வணங்காமுடி ஆகியோர் தமிழக முதல்வர் நிவாரண பணிக்கு ரூபாய் ஒரு கோடி கொடுத்துள்ளனர். அவர்களுக்கு அபெக்ஸ் லேபரட்டரி சொந்தமாக உள்ளது. மேலும் விசாகனின் குடும்பம் திமுகவினருக்கு மிகவும் நெருக்கமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

சிம்பு படத்தை தடை செய்ய வேண்டும்: இயக்குனரே வழக்கு தொடுத்ததால் பரபரப்பு!

சிம்பு நடித்த படத்தை படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என அந்த படத்தின் இயக்குனரே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மொட்டமாடியில் மகள்களுடன் 'குக் வித் கோமாளி' கனி: வைரல் புகைப்படங்கள்

சமீபத்தில் முடிவடைந்த 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது பல வாரங்கள் ஆகிய பின்னரும் ரசிகர்கள்

'மாஸ்டர்' நடிகையை படுக்கைக்கு அழைத்த நபர்: ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்டு பிளாக் செய்த நடிகை!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவரை இன்ஸ்டாகிராம் பயனாளி ஒருவர் படுக்கைக்கு அழைத்த நிலையில் அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நடிகை வெளியிட்டு இருப்பது

"இரக்கமுள்ள மனசுக்காரன், ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்".....ஆட்டோக்காரரை பாராட்டிய முதல்வர்....!

மதுரையில் இலவசமாக நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுனரை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பாராட்டியுள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் வீரருக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு?

இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடி வருபவர் விருத்திமான் சஹா.