நான் கூட சிவப்பு சிந்தனையாளர்ன்னு நினைச்சேன்: கரு.பழனியப்பனை கலாய்த்த கஸ்தூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் கரு.பழனியப்பன் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தாலும் அவரது விமர்சனத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சி அரசியல்வாதிகளும் ஆளாகினர். இந்த நிலையில் நேற்று திடீரென அவர் திமுக தூத்துகுடி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்தது.
இந்த நிலையில் கரு.பழனியப்பன் குறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில், 'கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர், சு.வெ க்கு மட்டும் பிரச்சாரம் பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்... ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல. குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல் ! என்று பதிவு செய்துள்ளார்.
வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த பதிவிற்கும் டுவிட்டர் பயனாளிகள் ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்களை மாறி மாறி பதிவு செய்து வருகின்றனர்.
கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர், சு.வெ க்கு மட்டும் பிரச்சாரம் பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்... ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல.
— Kasturi Shankar (@KasthuriShankar) April 9, 2019
குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல் !
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com