உங்களுக்கு பிக்பாஸ்ல்ல நல்ல எதிர்காலம் இருக்கு: கஸ்தூரி ட்விட்டிற்கு கமல் கட்சி நடிகை பதிலடி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
உங்களுக்கு பிக்பாஸ்ல நல்ல எதிர்காலம் இருக்கு என்று கமல் கட்சியில் சமீபத்தில் சேர்ந்த நடிகை வினோதினி குறித்து குறித்து நடிகை கஸ்தூரி ட்விட் போட்ட நிலையில் வினோதினி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நடிகை வினோதினி பதிவு செய்த ட்விட் குறித்து நடிகை கஸ்தூரி கூறியபோது, ’கமல் சார் கட்சியில் சேர்ந்தது ஏதோ சேவைக்குன்னு நினைச்சா...இவங்க செய்யுற வேலைய பாருங்களேன், உங்களுக்கு பிக்பாஸ்ல்ல நல்ல எதிர்காலம் இருக்கு’ என்று பதிவு செய்திருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் நடிகை வினோதினி கூறியிருப்பதாவது: அந்தம்மா… அதுதான்… திராவிடர்களை திராவிடியாஸ்னு கூப்பிட்டு ட்விட்டர் வரலாறு படைத்த பெண்மணி… நான் ஏதோ சேவை செய்ய மய்யத்துல இணைஞ்சேனாம், ஆனா உமா கார்கி போன்ற தேச பக்தாள் போட்ட ட்வீட்டயெல்லாம் காண்பித்து அவாளுக்கு எதிரா வன்மம் பரப்புறேனாம்னு கதறினாரே… அம்மாடி.. நான் மக்களுக்கு சேவை செய்யப்போறேன்னு எப்போம்மா சொன்னேன்? மக்களுக்கு கண் இனைக்காமல் சேவை செய்ய நான் என்ன நரேந்திரவா? (விவேகானந்தரச்சொன்னேன்). அவங்களுக்கு என்ன தேவையோ அதை அவங்க பார்த்துக்குவாங்க. எல்லாரும் மழுங்கடிக்கப்பட்ட மாட்டு மூளைக்கொண்டவங்க இல்ல. என்னோட/எங்களோட/பலரோட முயற்சி ஒண்ணே ஒண்ணுதான்… நான் பிறந்த ஹிந்து மதத்த வெச்சு கேவலமா கேம் ஆடுற ஒரு க்ரூப் இருக்கே… யாருன்னு என் வாயால ஏன் சொல்லணும்… அவங்கள… fill in the blanks… (இதை நான் ருத்ரம் சமகம் விஷ்ணு சஹஸ்ரநாமம் சௌந்தர்ய லஹிரி கந்த சஶ்டி கவசம் அனைத்தும் படிக்கும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அக்மார்க் ஹிந்துங்குற அடிப்படைலயே சொல்றேன்).
இதை செய்யுறதுக்கு மய்யத்துல இருக்கோமோ, மய்யத்து ஆபீஸ் வாசல்ல நிக்கிறோமோ, அறிவாலயத்துல இருக்கோமோ, 200 ரூ வாங்குறோமோ, கக்கூஸ் கழுவுறோமோ, எங்களுக்குள்ள அடிச்சிக்கிறோமோ, அதை நாங்க பார்த்துக்குறோம். நீங்கபோயி உங்க மதம் எப்படி எல்லா மதத்தவிடவும் சிறந்தது, பிரதமர் துவாபர யுகத்துல அமெரிகா சென்றிருந்தால் எப்படி புஸ்பகவிமானத்தில் சென்றிருப்பார்.. அன்றே சொன்னார் விசுவாமித்திரர் அப்படின்னு வாட்ஸாப் தகவல்கள ஷேர் பண்ணிட்டு, அடுத்த ஜென்ம புண்யத்துக்கு பூஜை புனஸ்காரத்துக்கு நடுவுல ட்விட்டர்ல ரெண்டு கெட்டவார்த்தைய கூசாம பேசிட்டு, ஒரு க்ளாஸ் கோமியம் குடித்துவிட்டு படுத்துத்தூங்குங்க. இன்றும் திராவிடர்களை திராவிடியாஸ் என்ற வார்த்தையைக்கொண்டு நீங்கள் அழைத்தது எவ்வளவு சாமர்த்தியமான வன்மச்செயல் மற்றும் வக்கிரத்தின் உச்சம் என்று நீங்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.
ஜெய் ஜக்கம்மா. (எல்லாரும் ஒண்ணு சொல்லுறாங்க, அதான் நானும்…)
கஸ்தூரி, வினோதினி ஆகிய இருவரது ட்விட்டர் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
அந்தம்மா… அதுதான்… திராவிடர்களை திராவிடியாஸ்னு கூப்பிட்டு ட்விட்டர் வரலாறு படைத்த பெண்மணி… நான் ஏதோ சேவை செய்ய மய்யத்துல இணைஞ்சேனாம், ஆனா உமா கார்கி போன்ற தேச பக்தாள் போட்ட ட்வீட்டயெல்லாம் காண்பித்து அவாளுக்கு எதிரா வன்மம் பரப்புறேனாம்னு கதறினாரே… அம்மாடி.. நான் மக்களுக்கு…
— Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) June 26, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments