தேசிய கட்சிகளுக்கு கூஜா தூக்கும் தமிழ் கட்சிகள்: நடிகை கஸ்தூரி
Send us your feedback to audioarticles@vaarta.com
உச்சநீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதற்கு முழுக்க முழுக்க கர்நாடக மாநில தேர்தல் தான் காரணம் என்பது தெரிந்ததே. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியான பாஜகவும் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இதே இரண்டு கட்சிகள் மேலாண்மை வாரியத்திற்கு ஆதரவு தெரிவித்து தங்களது பச்சோந்தித்தனத்தை நிரூபித்து வருகிறது.
அதேபோல் தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு வலிமையான அழுத்தத்தை கொடுக்க தவறிவிட்டன என்றே விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: தேசிய கட்சிகளுக்கு கண்டிப்பாக கர்நாடகம்தான் முக்கியம். அவர்களை சொல்லி குற்றமில்லை. அவர்களுக்கு கூஜா தூக்கும் நம் அக்மார்க் தமிழ் கட்சிகளை எங்கு நோவது? மாறி மாறி கூட்டணி வைக்கும் பச்சோந்தி கட்சிகளிடம் மக்கள் நலனை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com